காலி கிந்தொட்டை சம்பவம் – இழப்பீடு வழங்க நடவடிக்கை…

காலி கிந்தொட்டை சம்பவம் – இழப்பீடு வழங்க நடவடிக்கை…

காலி கிந்தொட்டை சம்பவத்தில் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சம்பத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் சபைமுதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

எதிர்கட்சியின் பிரதம கொரடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க நிலையியல் கட்டளையின் 23(2) கீழ் முன்வைத்த கேள்வியொன்றுக்கு அமைச்சர் பாராளுமன்றத்தில் இன்று(24) பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் தெரிவிக்கையில் , நாட்டில் அனைத்து இன மக்களையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.இந்த பொறுப்பில் அரசாங்கம் செயற்படுகின்றது. இழப்பீடு வழங்குவதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக : நஷ்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முறைப்பாடுகள் தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து பொலிசாருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.