ஒரே பழத்தில் இத்தனை நன்மைகள் என்றால் நீங்க இத சாப்பிடாமா இருப்பீங்களா?

ஒரே பழத்தில் இத்தனை நன்மைகள் என்றால் நீங்க இத சாப்பிடாமா இருப்பீங்களா?

உங்களது குழந்தைகளுக்கு என்ன பழம் கொடுக்கலாம் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? நிறைய ஆரோக்கிய நலன்களை தன்னுள் அடக்கியது தான் மாதுளை..

செரிமானம்:
மாதுளை செரிமான பிரச்சினைகளை சரிசெய்யும். எனவே உங்கள் குழந்தைக்கு ஏதேனும் செரிமான பிரச்சினை இருப்பின், இப்பழத்தை கொடுங்கள் விரைவில் குணமாகும்.

வயிற்று புழுக்கள்:
குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் அதிகம் இருக்கும். இப்படி வயிற்றில் புழுக்கள் அதிகம் இருந்தால், அவர்கள் உட்கொள்ளும் உணவுகளை புழுக்கள் உறிஞ்சிவிடும். ஆனால் மாதுளை ஜூஸை அடிக்கடி கொடுப்பதன் மூலம், குடல் புழுக்களை அழித்து வெளியேற்றலாம்.

பல் பிரச்சினை:
மாதுளை குழந்தைகளின் பற்களில் உள்ள பிரச்சினைகளைப் போக்க உதவும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-வைரஸ் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் தான் காரணம்

நோய்க்கிருமிகள்:
மாதுளையில் பாக்டீரியா, நுண்ணுயிரிகள் மற்றும் அழற்சிகளை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது. ஆகவே இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம், அவர்களது உடலானது நோய்க்கிருமிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்படும்.

முடி வளர்ச்சி:
மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் விட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன

மூளை வளர்ச்சி:
அயல்நாடுகளில், பிறந்த குழந்தையின் மூளையில் எந்தப் பாதிப்பும் வராமல் தடுப்பதற்கு மாதுளை சிரப்பைத்தான் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள், தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும்.

சர்க்கரை நோய்:
மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.