வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடலாமா?

வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடலாமா?

அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஓர் பழம் தான் பப்பாளி. பலரும் பப்பாளி சரும ஆரோக்கியத்தை அதிகரித்து, நல்ல பொலிவான சருமத்தைப் பெற உதவும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த பழத்தை ஒருவர் தங்களது அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெறலாம் என்பது தெரியுமா? ஏனென்றால் பப்பாளியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

செரிமானம் பப்பாளியில் உள்ள பாப்பைன் மற்றும் சைமோபாப்பைன், செரிமானம் சிறப்பாக நடக்க உதவி புரியும். மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை உள்ளவர்கள், பப்பாளியை உட்கொண்டால், அதில் உள்ள நார்ச்சத்து நல்ல நிவாரணத்தை வழங்கும்.

இரத்த அழுத்தம்:
பப்பாளியில் உள்ள பொட்டாசியம் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள், ஒரு மாதம் தொடர்ந்து பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

கொலஸ்ட்ரால்:
பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுக்கும். மேலும் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால், இது கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்து விடுவிக்கவும் செய்யும்.

புற்றுநோய்:
பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்துப் போராட உதவும். இதில் இருக்கும் டயட்டரி நார்ச்சத்துக்கள் குடலில் உள்ள புற்றுநோய் செல்கள் மற்றும் கார்சினோஜெனிக் செல்களை உடலில் இருந்து வெளியேற்றும். அதோடு இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின்சி, ஈ, லைகோபைன், பீட்டா-கிரிப்டோஜாந்தின் மற்றும் பீட்டா-கரோட்டீன் புற்றுநோய் தாக்கத்தைத் தடுக்கும்.

வயிற்றுப்புழுக்கள்:
பப்பாளி வயிற்றுப்புழுக்களை வெளியேற்ற உதவும். அதிலும் பப்பாளியின் விதையை உலர வைத்து அரைத்து பொடி செய்து, 2 டீஸ்பூன் பொடியுடன் சிறிது தேன் கலந்து தினமும் காலையிலும், இரவிலும் உட்கொண்டால், வயிற்றுப் புழுக்கள் அழிந்து வெளியேறிவிடும்

அழற்சி:
பப்பாளியில் புரோட்டீனை உடைத்தெறியும் நொதிகளான பாப்பைன் மற்றும் சைமோபாப்பைன் உள்ளது. இது சருமத்தில் உள்ள புரோட்டீன்களை உடைத்தெறிந்து, இறந்த செல்களை நீக்கி, சருமத்தில் ஏற்பட்ட அழற்சியைத் தடுக்கும்.

சளி:
பப்பாளியில் இருக்கும் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி, நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவி, சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும். ஆகவே ஒருவர் தினமும் வெறும் வயிற்றில் பப்பாளியை சாப்பிட்டு வந்தால், இந்த தொல்லைகளில் இருந்து விடுபடலாம். முக்கியமாக பப்பாளி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்.

கண்கள்:
பப்பாளி கண்களுக்கு நல்லது. பப்பாளியில் உள்ள பீட்டா-கரோட்டீன், கரோட்டினாய்டுகள், லுடீன் போன்ற பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் கண்கள் மற்றும் கண் தசைகளுக்கு நல்லது. ஒருவர் தினமும் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.