அமெரிக்காவில் கொட்டும் பனி மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

அமெரிக்காவில் கொட்டும் பனி மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

அமெரிக்கா மற்றும் கனடாவில் சாலைகளை மூடும் அளவுக்கு கொட்டும் பனிமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பென்சில்வேனியாவின் எரீ நகரில் கிறிஸ்மஸ் பண்டிகையில் இருந்து பனி மழை பெய்வதுடன் அங்கு பாதைகளில் 5 அடி உயரம் வரை பனி கொட்டிக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பனியை அகற்றுவதில் தேசிய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை,‘கிரேட் லேக்ஸ்’ பகுதியில் கடும் பனி மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்ன கோட்டா மற்றும் நியூ ஹாம்ப்ஷிர்ஸ் மாகாணத்தில் மவுண்ட் வாஷிங்டன் ஆகிய பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. இங்கு மைனஸ் 38.3 டிகிரி மற்றும் மைனஸ் 36.3 டிகிரி அளவில் தட்ப வெப்ப நிலை காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

கடும் குளிர் காரணமாக சிகாகோவில் 62 வயது முதியவரும், கன்சாசில் 4 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.