தூங்கும் முன் பாதாம் எண்ணெயை இப்படி ட்ரை பண்ணுங்க சீக்கிரம் வெள்ளையாகலாம்…

தூங்கும் முன் பாதாம் எண்ணெயை இப்படி ட்ரை பண்ணுங்க சீக்கிரம் வெள்ளையாகலாம்…

நல்ல பொலிவான, வெள்ளையான சருமம் வேண்டுமென்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். க்ரீம்களின் உபயோகத்தைக் குறைத்து, இயற்கை வழிகளின் மூலம், சரும நிறத்தை அதிகரிக்க முயற்சிப்பது தான் நல்லது.

அதிலும் நம் வீட்டில் உள்ள குறிப்பிட்ட பொருட்களுக்கு சரும நிறத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. அதில் ஒன்று தான் பாதாம் எண்ணெய்.

பேஷியல் மசாஜ்:
உள்ளங்கையில் சிறிது பாதாம் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். பின் அந்த எண்ணெயை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இரவு முழுவதும் எண்ணெயை நன்கு ஊற வையுங்கள். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த முறையை வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பாதாம் எண்ணெய் மற்றும் லாவெண்டர் ஆயில்:
ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெயில் 2-3 துளிகள் லாவெண்டர் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அந்த எண்ணெயை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வையுங்கள். பின்பு நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த எண்ணெய் கலவையை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துங்கள்

பாதாம் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல்:
ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதை முகத்தில் தடவி 1 மணிநேரம் நன்கு ஊற வையுங்கள். பின்பு மைல்டு ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவுங்கள். அதைத் தொடர்ந்து ஸ்கின் டோனர் எதையேனும் பயன்படுத்துங்கள். இந்த செயலை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த, சரும நிறம் மேம்படுவதைக் காணலாம்.

பாதாம் எண்ணெய், ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின்:
ஒரு சிறிய பௌலில் 1/2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய், 3-4 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர், 4-5 கிளிசரின் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அவற்றை நன்கு கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, எஞ்சிய அதே கலவையால் முகத்தைக் கழுவ வேண்டும். அதைத் தொடர்ந்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை தவறாமல் பயன்படுத்த, முகப் பொலிவு சிறப்பாக இருக்கும்.

பாதாம் எண்ணெய் மற்றும் வாழைப்பழம்:
நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20-25 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை மாதத்திற்கு 2 முறை பயன்படுத்த, சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாகும்.