எண்ணெய் வழிந்தவாறு அசிங்கமாக இருக்கும் முகத்தை அழகாக்கும் சில வழிகள்…

 எண்ணெய் வழிந்தவாறு அசிங்கமாக இருக்கும் முகத்தை அழகாக்கும் சில வழிகள்…

சிலரது சருமம் அதிக எண்ணெய் பசையுடன், முகத்தில் எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு அசிங்கமாக காணப்படும். இதற்கு காரணம் நம் சருமத்திற்கு அடியில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் தான் காரணம்.

சருமத்தில் வழியும் அதிகளவு எண்ணெய் பசையைப் போக்கும் ஸ்கரப்களை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.

நாட்டுச் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு:
தேவையான பொருட்கள்:
நாட்டுச் சர்க்கரை – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
செய்முறை: ஒரு பௌலில் இரண்டு பொருட்களையும் போட்டு நன்கு கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி, சில நிமிடங்கள் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் கடலை மாவு:
தேவையான பொருட்கள்:
முட்டையின் வெள்ளைக்கரு – 1
கடலை மாவு – 1 டீஸ்பூன்
செய்முறை: ஒரு சிறிய பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் கடலை மாவு சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, அதன்பின் முகத்தை உலர்த்தி, டோனர் எதையேனும் பயன்படுத்துங்கள்.

வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் அரிசி மாவு:
தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் சாறு – 2 டீஸ்பூன்
அரிசி மாவு – 1/2 டீஸ்பூன்
செய்முறை: ஒரு பௌலில் இரண்டு பொருட்களையும் போட்டு நன்கு கலந்து பின் முகத்தை நீரால் நனைத்து, அதன் பின் இந்த கலவையை முகத்தில் தடவி, சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பின் மென்மையாக ஸ்கரப் செய்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இறுதியில் முகத்தைத் துடைத்து மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.