அடர்த்தியான புருவம் வேண்டுமா? அப்போ இவற்றில் ஒன்றை தினமும் செய்யுங்க…

அடர்த்தியான புருவம் வேண்டுமா? அப்போ இவற்றில் ஒன்றை தினமும் செய்யுங்க…

சிலருக்கு புருவங்களே சரியாக தெரியாது. அத்தகையவர்கள் ஐ-ப்ரோ பென்சிலைப் பயன்படுத்துவார்கள். புருவங்களின் வளர்ச்சியைத் தூண்டும் விட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த பொருட்களைக் கொண்டு எப்படி புருவங்களுக்கு பராமரிப்பு கொடுப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை அன்றாடம் தவறாமல் பின்பற்ற வேண்டும். புருவங்களை நன்கு அடர்த்தியாக வளர உதவும் சில எளிய வழிகள் குறித்துக் பார்க்கலாம்…

விளக்கெண்ணெய்:
விளக்கெண்ணெயை விரலால் தொட்டு அதனை புருவங்களின் மீது தடவ வேண்டும். பின்பு 40-45 நிமிடம் நன்கு ஊற வைக்கவும். அதன் பின் ஈரமான துணியால் புருவங்களைத் துடைத்து எடுக்கவும். இந்த செயலை தினமும் ஒரு முறை செய்து வந்தால், புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.

விட்டமின் ஈ ஆயில்:
விட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை துளையிட்டு எடுத்துக் கொள்ளுங்கள். பின் அந்த எண்ணெயை இரவில் படுக்கும் போது புருவங்களின் மீது தடவி, இரவு முழுவதும் ஊற வையுங்கள். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இந்த செயலை தினமும் ஒருமுறை செய்து வர நல்ல பலனைக் காணலாம்.

கற்றாழை:
கற்றாழையின் ஜெல்லை இரண்டு புருவங்களின் மீதும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் நன்கு ஊற வைத்து மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த செயலை தினமும் செய்து வர, புருவங்கள் அடர்த்தியாக வளர்வதைக் காணலாம்.

பால்:
பாலை பஞ்சுருண்டையில் நனைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை புருவங்களின் மீது தடவிய பின் 20-25 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த செயலை தினமும் 2-3 முறை என தினமும் செய்ய புருவங்களில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெயை புருவங்களின் மீது தடவி, மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின் 1 மணிநேரம் நன்கு ஊற வையுங்கள். இறுதியில் கிளின்சர் பயன்படுத்தி, புருவங்களை நன்கு கழுவுங்கள்