சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிக்க அரசாங்கம் உடன்பட்டிருந்ததாக எரிவாயு நிறுவனம் தெரிவிப்பு..

சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிக்க அரசாங்கம் உடன்பட்டிருந்ததாக எரிவாயு நிறுவனம் தெரிவிப்பு..

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிக்க அரசாங்கம் உடன்பட்டிருந்ததாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

லாப் (Laugh) நிறுவனத்தின் தலைவர் டப்ளியூ.கே.எச். வேகபிடிய இது குறித்து தெரிவிக்கையில், சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பிற்கான கோரிக்கை அண்மையில் விடுக்கப்பட்டதொன்றல்ல என தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு மற்றும் ரூபாய் இனது மதிப்பின் சரிவு காரணமாக குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. நிலவும் சூழ்நிலை குறித்து ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒருமுறை நுகர்வோர் அதிகார சபைக்கு தகவல்களை வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு குறித்து நேற்று(20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவுகையில், விலை அதிகரிப்பு குறித்து இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

#rishma