மார்ச் 26ம் திகதி முதல் முச்சக்கர வண்டியின் கட்டணங்கள் அதிகரிப்பு!!!

மார்ச் 26ம் திகதி முதல் முச்சக்கர வண்டியின் கட்டணங்கள் அதிகரிப்பு!!!

கடந்த காலங்களில் முச்சக்கர வாகனம் மற்றும் முச்சக்கர வாகன உதிரி பாகங்களது விலை 150% அதிகரித்துள்ளதாகவும், எதிர்வரும் மார்ச் மாதம் 26ம் திகதி முதல் முச்சக்கர வண்டிக்கான கட்டணங்களை அதிகரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக லங்கா சுய வேலைவாய்ப்பு ஊழியர்களது முச்சக்கர வாகன சங்கம் தெரிவித்துள்ளது.

வரி அதிகரிப்பினால் முச்சக்கர வாகனங்களதும் அதன் உதிரிப் பாகங்களதும் விலை அதிகரித்துள்ள நிலையில், ஒரு மாத காலத்தினுள் இதற்கு தீர்வு கிடைக்கப் பெறாதவிடத்து மேற்குறித்த தீர்மானத்தினை மேற்கொள்ள நேரிடும் எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மார்ச் 26ம் திகதி முதல் இரண்டாம் Km இற்கு அப்பால் அறவிடப்படும் ரூ.40 ஆனது ரூ.50 ஆக அதிகரிக்கப்படும் என குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, முச்சக்கர வண்டி பயணிகளுக்கு வழங்கியிருந்த ஒரு சலுகையும் இல்லாது போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது நடைமுறையில் உள்ள முறையின் கீழ் முதல் Km இற்கு ரூ.50வும், இரண்டாம் Km இலிருந்து ரூ.40வும் அறவிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma