அதிகாரத்தினை கைப்பற்றிய மன்றங்களில் பதவிகளை வழங்க ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி 04 அடிப்படைகள் குறித்து அவதானம்…

அதிகாரத்தினை கைப்பற்றிய மன்றங்களில் பதவிகளை வழங்க ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி 04 அடிப்படைகள் குறித்து அவதானம்…

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி அதிகாரத்தினை கைப்பற்றிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிகளை வழங்குகையில் 04 அடிப்படை கட்டங்களை பின்பற்ற தீர்மானித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் உள்ளூராட்சி மன்ற ஆதரவாளர்களது அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2015 ஜனவரி 08ம் திகதியின் பின்னர் கூட்டு எதிர்க்கட்சியுடன் இருக்க வேண்டும் என்பது முதல் அடிப்படையாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறே, முன்னாள் தலைவர்கள் மற்றும் மேயர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்பது இரண்டாவது அடிப்படையாகும். மற்றும் மூத்த அமைப்பாளர்கள் பரிந்துரையின் பேரில் வாக்கு- சதவீத அடிப்படையில் பதவி வழங்குவது மூன்றாவது அடிப்படையாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பிரிவுகளில் தோல்வியினைத் தழுவிய வேட்பாளர்களுக்கு பாராளுமன்ற உறுப்புரிமை கிடைக்கப் பெற்றாலும் எவ்வித பதவிகளையும் வழங்கப்படாது என்பது நான்காவது தகுதி அடிப்படையாகவும் கணிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே, மேற்குறித்த தகுதி நிலையிலான பதவி நியமனம் அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும் எனவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 

 

#rishma