வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 60 மில்லியன் ரூபா நிதி உதவி…

வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 60 மில்லியன் ரூபா நிதி உதவி…

வறட்சி காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் 60 மில்லியன் ரூபா நிதியினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு மாத காலத்திற்கான உலர் உணவு நிவாரணம் வழங்குவதற்கான பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வறட்சியின் காரணமாக ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகளை வழங்கும் 2 ஆம் கட்டப்பணிகள் இடம்பெறுவதாகவும் முல்லைத்தீவு தேசிய அனர்த்த நிவாரண சேவை திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் இன்று(21) தெரிவித்துள்ளார்.

இதற்கான வேலைத்திட்டம் இன்னும் ஒரு மாத காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2017 ஆம் ஆண்டு சிறுபோகத்தாலும் 2017-2018 ஆம் ஆண்டு பெரும் போகத்தாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் 14 ஆயிரத்து 500 குடும்பங்கள் பயனடைவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.