பழ பேஸ் பேக்குகள் (Face pack) மூலம் சரும வறட்சியை எப்படி தடுக்கலாம்?

பழ பேஸ் பேக்குகள் (Face pack) மூலம் சரும வறட்சியை எப்படி தடுக்கலாம்?

வறட்சியான சருமம் உள்ளவர்கள் தினமும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தாவிட்டால், அவர்களது சருமமே அசிங்கமாக காட்சியளிக்கும்.

வறட்சியான சருமத்தினர் தங்களது சரும வறட்சியைத் தடுக்க ஒருசில பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக் (Face pack) போட்டு வந்தால், நிச்சயம் வறட்சியைத் தடுக்கலாம்.

மாதுளை ஃபேஸ் பேக்:
ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் மாதுளை ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்த பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதன் பின் டோனரைப் பயன்படுத்த வேண்டும். இந்த மாஸ்க்கை மாதத்திற்கு 2 முறை பயன்படுத்த, முகத்தில் ஏற்படும் வறட்சி நீங்கும்.

ஆரஞ்சு ஃபேஸ் பேக்:
ஒரு பௌலில் 1 டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைத்த பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதன் பின் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும். *ந்த மாஸ்க்கை வாரந்தோறும் பயன்படுத்தினால், சரும வறட்சியால் அசிங்கமாக தோல் உரிந்து காணப்படுவதைத் தவிர்க்கலாம்.

வாழைப்பழ ஃபேஸ் பேக்:
ஒரு பௌலில் நன்கு கனிந்த வாழைப்பழத்தைப் போட்டு மசித்து அதில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதன் பின் அந்த கலவையை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதைத் தொடர்ந்து சருமத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும். இந்த பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த, சரும வறட்சி அகலும்.

ஆப்பிள் ஃபேஸ் பேக்:
ஆப்பிளை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து பின்பு முகத்தில் அந்த கலவையைத் தடவி, 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். அதன் பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால், நல்ல பலனைப் பெறலாம்.

திராட்சை ஃபேஸ் பேக்:
ஒரு கையளவு திராட்சையை எடுத்து பிசைந்து அதில் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு முகத்தை நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை மாதத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், சருமம் அதிகம் வறட்சியடைவதைத் தடுக்கலாம்.