டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய செயலி (app)…

டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய செயலி (app)…

இலங்கையில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், பாடசாலை மாணவர்களுக்கு இடையில் டெங்கு நோய் தொற்று பரவுவதனை தடுக்கும் வகையில் கையடக்க தொலைபேசி செயலி (app) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று(27) நடைபெற்றது.

“டெங்கு நோயற்ற பிள்ளைகள்” (Dengue Free Child) என்ற பெயரில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, கொழும்பு பல்கலைக்கழகம், சிங்கப்பூர் Nanvang தொழில்நுட்ப பல்லைக்கழகம் இணைந்து இதனை தயாரித்துள்ளது.

இந்த செயலி மூலம் மிகவும் செயற்பாடு மிக்க டெங்கு நோய் மற்றும் சந்தேகத்திடமான முறையில் காணப்படும் காய்ச்சலை கண்டுபிடிக்க உதவுகின்றது.

இதன் ஊடாக டெங்கு தொற்று ஏற்பட கூடிய பிரதேசங்களை கண்டுபிடித்து துப்பரவு செய்வதற்கும், அதனை அழிப்பதற்கும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செயலியை பயன்படுத்தி டெங்கு நோய் தொற்று தொடர்பான பிரதேசங்களில் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் தொடர்பில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என நம்பப்படுகின்றது.