முகப்பரு மற்றும் கருமையைப் போக்க, தக்காளியை ட்ரை பண்ணுங்க…

முகப்பரு மற்றும் கருமையைப் போக்க, தக்காளியை ட்ரை பண்ணுங்க…

சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயற்கை வழிகளைத் தேடுவோம். உங்களுக்கு அதிக செலவு இல்லாமல் வீட்டு சமையலறையில் உள்ள பொருளைக் கொண்டே சரும பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தக்காளி கொண்டு ஃபேஸ் பேக் போடுங்கள்.

முகப்பருக்கள் போக்க:
தேவையான பொருட்கள்:
தக்காளி – 1
தேன் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

தக்காளியை துண்டுகளாக்கி நன்கு அரைத்துக் பின் அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, முகம் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், இப்பிரச்சனையைக் குறைக்கலாம்.

சரும பொலிவை அதிகரிக்க:
தேவையான பொருட்கள்:
தக்காளி – 1
தண்ணீர் – 1 கப்

தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி, நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வையுங்கள். 15 நிமிடம் ஆனதும், நீரால் கழுவுங்கள். இப்படி ஒருமுறை செய்தாலே ஒரு நல்ல மாற்றத்தை உங்கள் சருமத்தில் காணலாம்.

சரும கருமையைப் போக்க:
தேவையான பொருட்கள்:
தக்காளி – 1
தேன் – 1 டீஸ்பூன்

நன்கு கனிந்த தக்காளியின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி மசித்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால், சருமம் கருப்பாக காட்சியளிப்பதைத் தவிர்க்கலாம்.

கருவளையத்தைப் போக்க:
தேவையான பொருட்கள்:
தக்காளி ஜூஸ் – 1 டீஸ்பூன்
கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்

ஒரு பௌலில் தக்காளி ஜூஸ் மற்றும் கற்றாழை ஜெல்லை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் உலர வைத்து, பின்பு நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி தினமும் 1-2 முறை செய்து வந்தால், கருவளையங்கள் விரைவில் மறையும்.

கரும்புள்ளிகள் நீங்க:
தேவையான பொருட்கள்:
தக்காளி சாறு – 1-2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – சில துளிகள்

ஒரு பௌலில் தக்காளி சாறு மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-12 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். பின் துணியால் சருமத்தைத் துடைத்து, மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள். இப்படி தினமும் 1 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையான தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை போய்விடும்.