பிரான்ஸ் நாட்டில் அதிகரிக்கும் ஓரினச்சேர்க்கை திருமணங்கள்…

பிரான்ஸ் நாட்டில் அதிகரிக்கும் ஓரினச்சேர்க்கை திருமணங்கள்…

கடந்த 05 ஆண்டுகளில் மட்டும் பிரான்சில் 40,000 இற்கும் மேற்பட்ட ஓரினச்சேர்க்கை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரான்சில் ஓரினச்சேர்க்கை திருமணங்கள் சட்டபூர்வமாக அமுல்படுத்தப்பட்டு நேற்றுடன்(24) 5 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது. இதனடிப்படையில் வழங்கப்பட்ட புள்ளிவிபர பட்டியலில் 40,000 ஓரினச்சேர்க்கை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வருடம் மட்டுமே 7,000 திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஓரினச்சேர்க்கை திருமண சட்டத்தின் மூலம் திருமணம் செய்யும் தம்பதிகள் குழந்தை ஒன்றை தத்தெடுத்து கொள்ளும் உரிமையும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஓரினச்சேர்க்கை திருமணங்கள் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.