இலங்கையில், மீளவும் மலேரியா ஏற்படும் ஆபத்து….

இலங்கையில், மீளவும் மலேரியா ஏற்படும் ஆபத்து….

நுளம்புகளினால் ஏற்படக்கூடிய நோய்களுள் ஒன்றான மலேரியாவை, முற்றிலும் ஒழித்த நாடு இலங்கை என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்த போதும், மீண்டும் இலங்கையில், மலேரியா காய்ச்சல் ஏற்படக்கூடிய ஆபத்து உருவாகலாம் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தியா உட்பட இலங்கையின் அண்டைய நாடுகள் பலவற்றிலும், மலேரியாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அது இலங்கையிலும் பரவக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், அனில் ஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், மலேரியா எதிர்ப்பு பிரச்சார பிரிவு சுகாதார அமைச்சிற்கு உட்பட்டதாகும். இது கொழும்பு 5இல் பொது சுகாதார கட்டடத்தொகுதி 555/5 எல்வெட்டிகெல மாவத்தையில் அமைந்துள்ளது.
(இதன் தொலைபேசி இலக்கங்கள் 0117 626 626, 0112 588 408, 0112 368 173)

அது தவிர நாடு முழுவதிலும் 21 மாவட்டங்களில் மலேரியா அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு:

அம்பாறை – 063 222 3464
அனுராதபுரம் – 025 222 1844
பதுளை – 055 222 9560
மட்டக்களப்பு – 065 222 2931
எம்பிலிப்பிட்டிய – 047 223 0301
ஹம்பாந்தோட்டை – 047 225 8135
யாழ்ப்பாணம் – 021 222 7924
கண்டி – 081 221 0687
கல்முனை – 067 222 0206
கேகாலை – 035 222 3480
கிளிநொச்சி – 021 228 5517
குருநாகல் – 037 222 2193
மாஹோ – 037 227 5254
மன்னார் – 023 323 9547
மாத்தளை – 066 222 2295
மொனறாகலை – 055 227 6698
முல்லைத்தீவு – 021 206 0007
பொலனறுவை – 027 222 6018
புத்தளம் – 032 226 5319
திருகோணமலை – 026 222 2584
வவுனியா – 024 222 2954