20 வருடங்களுக்கு பிறகு அமெரிக்கா சென்ற வடகொரிய அதிகாரி…

20 வருடங்களுக்கு பிறகு அமெரிக்கா சென்ற வடகொரிய அதிகாரி…

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங்-உன்னின் முக்கிய உதவியாளரான ஜெனரல் கிம் யாங்-சோல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் இடையே நிகழ திட்டமிடப்பட்டுள்ள சந்திப்பு குறித்து விவாதிக்க அமெரிக்கா சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோவை அவர் சந்தித்துப் பேசினார். வடகொரியாவைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் அமெரிக்கா வருவது சுமார் 20 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

ஜூன் 12 திகதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சந்திப்பில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என்று டிரம்ப் முன்னதாக அறிவித்திருந்தார். எனினும், திட்டமிடப்பட்டபடி அந்த சந்திப்பு நடைபெறுவதற்காக இரு தரப்பினரும் மீண்டும் புதிதாக முயற்சி செய்து வருகின்றனர்.

நியூயார்க்கில் ஐ.நா தலைமையகம் அருகே நடைபெற்ற சந்திப்புள் பாம்பேயோ மற்றும் ஜெனரல் கிம் ஆகியோர் சென்றிருந்தாதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் வடகொரியத் தலைவர்கள் சந்திக்க திட்டத்துடனேயே இன்னும் இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சாரா சேண்டர்ஸ் கூறியுள்ளார்.