இரகசிய காய் நகர்த்தலில் கோட்டாவுக்கு தலை விழும் அறிகுறி…

இரகசிய காய் நகர்த்தலில் கோட்டாவுக்கு தலை விழும் அறிகுறி…

2020ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என மக்கள் விரும்புவார்களானால், அவரை ஒன்றிணைந்த எதிர்கட்சியின் வேட்பாளராக நிறுத்துவதில் எவ்வித சிக்கல் நிலையம் இருக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர் தலைமையில் அமைத்துள்ள ‘வியத்மக’ என்ற அமைப்பின் ஊடாக நாடு தழுவிய ரீதியில் கூட்டங்களை நடத்தி, நாட்டின் ஆட்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்றும், பொருளாதார மற்றும் வெளிவிவகாரக் கொள்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்றும் தெளிவுபடுத்தி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தீர்மானித்துள்ளதாலேயே அவர் நேரடியாக இவ்வாறான பிரசாரங்களை மேற்கொண்டுவருவதாக அவரது ஆதரவாளர்களும், எதிர்தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும்இ மக்களும் விரும்பினால், தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ தனது விருப்பத்தினை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.