மிதமிஞ்சிய உடற்பருமன் பிரச்சினை – துரித ஆலோசனை வழங்க 24 மணி நேரமும் இலவச சேவை…

மிதமிஞ்சிய உடற்பருமன் பிரச்சினை – துரித ஆலோசனை வழங்க 24 மணி நேரமும் இலவச சேவை…

மிதமிஞ்சிய உடற்பருமன் பிரச்சினை தொடர்பில் துரித ஆலோசனை வழங்க 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி சேவையை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.

அளவுக்கு அதிகமான உடற்பருமனைக் குறைத்துக் கொள்வதற்கு துரித ஆலோசனை வழங்கக் கூடியவகையில் குறித்த இந்த தொலைபேசி சேவை அமுலாகிறது.

இதனை தொடர்பு கொள்ள அழைக்க வேண்டிய இலக்கம் 071 0107 107 என்பதாகும். இதனூடாக இலவச ஆலோசனைகளை பெற முடியும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மருத்துவர்களையும், விசேட நிபுணர்களையும் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய சுவசரிய நடமாடும் சுகாதார ஆலோசனை சேவையை சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் மக்கள் பணியாக முன்னெடுக்கின்றது.

ஜூன் மாதம் போஷாக்கு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொனிப்பொருள் உடல் எடை குறைத்து சரியான வழியில் செல்வோம் என்பதாகும். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் மக்களுக்கு மத்தியில் அளவுக்கு அதிகமான உடற்பருமன் என்பது சுகாதார நெருக்கடியாக மாறியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வயது வந்தோர் மத்தியில் சுமார் 17 சதவீதமானோர் உடல் எடைக்கு பொருத்தமற்ற வகையில் அதீத பருமன் மிக்கவர்களாக காணப்படுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.