ஒரே தினத்தில் போட்டிபோட தயாராகும் தனுஷ், சிவா…

ஒரே தினத்தில் போட்டிபோட தயாராகும் தனுஷ், சிவா…

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வடசென்னை’ திரைப்படம் வெளியாகும் அதே தினத்தில் சிவகார்த்திகேயன் படமும் வெளியாக இருக்கிறது.

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் நடிப்பில் உருவாகும் படம் ‘சீமராஜா’ படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த காட்சிகளுக்காக சிவகார்த்திகேயன் இதுவரை நடிக்காத புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ஜூன் 19ம் திகதி முழுவதுமாக முடிவடைய இருக்கிறது. இதனையடுத்து, டீசர், டிரைலர்களை விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தை செப்டம்பர் 13ம் திகதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

இதே தினத்தில்தான் தனுஷின் ‘வடசென்னை’ படமும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.