சுவிட்சர்லாந்தில் முதன் முறையாக HIV சுய பரிசோதனைக்கு அரசு அனுமதி…

சுவிட்சர்லாந்தில் முதன் முறையாக HIV சுய பரிசோதனைக்கு அரசு அனுமதி…

சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக இன்று முதல் HIV சுய பரிசோதனை செய்ய அரசு அனுமதியளித்துள்ளது.

அத்துடன் இந்த சோதனை செய்ய உதவும் உபகரணங்கள் தற்போது நாடு முழுவதும் மருந்தகங்களிலும் இணையம் மூலமாகவும் கிடைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ஹெச்.ஐ.வி சோதனை செய்ய வேண்டுமானால் மருத்துவமனைக்கு சென்று மருத்துவதுறையிலுள்ள ஒருவரால் மட்டுமே அதை செய்து கொள்ள முடியும்.

தற்போது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அந்நோயை உண்டாக்கும் கிருமியின் கண்டுபிடிப்பு வீதத்தை அதிகரிப்பதற்காகவும் சுகாதார அலுவலகமும் பாலியல் நலத்திற்கான ஃபெடரல் கமிஷனும் பொதுமக்களே இச்சோதனைகளை செய்து கொள்ள சமீபத்தில் பரிந்துரை செய்துள்ளன.

இந்த உபகரணத்தில் ஒரு சிறு ஊசியால் விரல் நுனியில் குத்தி எடுக்கப்படும் அளவு இரத்தமே ஹெச்.ஐ.வி நோயைக் கண்டுபிடிக்க போதுமானது.

ஒவ்வொரு உபகரணத்துடனும், ஒரு வேளை சோதனை ”பாஸிட்டிவ்” என்று வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஒரு துண்டுச் சீட்டு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த உபகரணம் மூலம் 30 நிமிடங்களுக்குள் ஹெச்.ஐ.வி இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய முடியும்.