வடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி – டிரம்ப்…

வடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி – டிரம்ப்…

அமெரிக்க செனட் சபையில் பேசிய ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி என தெரிவித்துள்ளார்.

ஏவுகணை மனிதர் என டிரம்ப்பால் விமர்சிக்கப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், கடந்த 12-ம் திகதி சிங்கப்பூரில் டிரம்பை சந்தித்து பேசினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு உலக தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

கிம்முடனான சந்திப்புக்கு பிறகு அமெரிக்காவின் வாஷிங்டன்னில் செனட் சபை நேற்று கூடியது. அதில் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.

இதன்போது, பேசிய டிரம்ப், வடகொரியா ஜனாதிபதி கிம்முடனான சந்திப்பு மிக பெரிய வெற்றியாக அமைந்தாது, அந்த சந்திப்பு மறக்க முடியாத அனுபவத்தை தந்துள்ளது என கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு நாடுகளுக்கு இடையே நல்ல உறவு நிலவி வருகிறது. வடகொரியா அறிவித்தபடி ஏற்கனவே இயங்கி வந்த அணு ஆயுத சோதனை மையங்களை அழித்துள்ளது. அணு ஆயுத ஏவுகணை சோதனைகளையும் நிறுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.