அரசுக்கு எதிராக இயங்கும் சுமார் 80 சமூக விரோத வலைத்தளங்கள் குறித்து வெளிச்சம்…

அரசுக்கு எதிராக இயங்கும் சுமார் 80 சமூக விரோத வலைத்தளங்கள் குறித்து வெளிச்சம்…

நாட்டில் செயற்பட்டு வரும் சுமார் 80 சமூக விரோத வலைத்தளங்கள் அரசாங்கத்தால் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று(21) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

“..இவ்வாறு இனங்காணப்பட்டுள்ள 80 இணையத்தளங்களில் 40 அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவை, எஞ்சிய 40உம் இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவை.

இவை தொடர்பில் அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெற்றிருக்கும் தகவல்களின் அடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், புதிதாக உருவாகியுள்ள அரசியல் கட்சிகளினாலேயே இவை முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன..

மேலும், இந்த சமூக வலைத்தளங்களை இயக்குவதற்கு இளைஞர்கள் குழுவொன்று பயன்படுத்தப்படுகின்றது” என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.