அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு இன்று முதல் புதிய வரிகள் அமுலுக்கு..

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு இன்று முதல் புதிய வரிகள் அமுலுக்கு..

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக கொள்கைக்கு எதிராக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள் இன்று(22) முதல் அமுலுக்கு வருகின்றதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன..

2.8 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீல ஜீன்ஸ், மோட்டார் சைக்கிள்கள், போர்போன் விஸ்கி போன்ற பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம் மீது அமெரிக்கா விதித்துள்ள விதிகள் “அனைத்து தர்க்கம் மற்றும் வரலாற்றுக்கு” எதிராக இருப்பதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவரான ஜோன் கிளவுட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் எஃகு பொருட்கள் மீது 25% மற்றும் அலுமினியப் பொருட்கள் மீது 10% என்று வரிவிதிப்பதாக கடந்த மார்ச் மாதம் டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

முன்னதாக, இந்த முடிவினை ஜங்கர் கடுமையாக விமர்சித்திருந்தார். இது தொடர்பாக நேற்று பேசிய அவர், “இந்த வரி விதிப்பு தர்க்கத்திற்கு எதிராக உள்ளது. எங்களின் பதில் நடவடிக்கை தெளிவாக ஆனால் சரியான அளவில் இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

டப்ளின் பாராளுமன்றத்தில் பேசிய அவர், “நாம் இதனை சமன் செய்யவும், ஐரோப்பிய ஒன்றியத்தை பாதுகாக்கவும் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்வோம்” என்று கூறினார்.

புகையிலை, ஹார்லி டேவிட்ஸன், மோட்டார் சைக்கிள்கல், கிரான்பெரிகள் மற்றும் பீனட் பட்டர் போன்ற அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், காலணிகள், சில துணிமணிகள் மற்றும் வாஷிங் மெஷின்கள் போன்ற பொருட்களுக்கு 50% வரியை ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையேயான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.