கண்ணாடி அணிவதால் மூக்கின் மேல் பகுதியில் படும் தழும்பினை இலகுவாக போக்கலாம்…

கண்ணாடி அணிவதால் மூக்கின் மேல் பகுதியில் படும் தழும்பினை இலகுவாக போக்கலாம்…

சத்துக்குறைபாடு உட்பட பல்வேறு காரணங்களால் பார்வைக்குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி அணியும் இந்த காலத்தில் கண்ணாடி அணிவதினால் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்திருப்போம்.

குறிப்பாக மூக்கின் மேல் பகுதியில் கண்ணாடியில் ஃப்ரேம் படும் பகுதியில் தொடர்ந்து அழுத்தம் ஏற்பட்டு ஒர் அடையாளமாகவே விழுந்து விடும்.

அதுவும் பவர் அதிகமாக இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை தீவிரமாக இருக்கும். நாளடைவில் அந்த அழுத்தம் ஏற்படும் பகுதியில் பிக்மென்டேசன் ஏற்பட்டு முகத்தில் அசிங்கமாக தெரியும்.

கற்றாழை :
கற்றாழையிலிருந்து எடுக்கப்படுகிற ஜெல் உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. கண்ணாடி அணிந்து ஏற்படுகிற அடையாளம் இருக்கும் இடங்களில் கற்றாழை ஜெல்லை தொடர்ந்து தடவி வாருங்கள். அது தானாகவே வேப்பர் ஆகிடும். அதனால் அடிக்கடி தடவலாம். மூன்று முறைக்கு மேல் தடவியதும் சற்று பிசுபிசுப்பாக தோன்றும் என்பதால் குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு :
உருளைக்கிழங்கு சமைப்பதற்கு மட்டுமல்ல உங்கள் சருமத்திற்கும் ஏராளமான நன்மைகளை செய்கிறது. குறிப்பாக கண் இருக்கும் பகுதிகளில் ஏற்படக்கூடிய கருவளையம் போன்ற பாதிப்புகளை சரி செய்ய இது உதவிடுகிறது. உருளைக்கிழங்கை தோல் சீவி அரைத்துக் கொள்ளுங்கள்.அதை கண்களைச் சுற்றியும், மூக்கில் மார்க் உள்ள பகுதிகளிலும் பூசி லேசாக மசாஜ் செய்திடுங்கள்.

அதன் பிறகு சுமார் பதினைந்து நிமிடம் அப்படியே காயவைத்த பிறகு கழுவிட வேண்டும். தொடர்ந்து இப்படி செய்து வர நல்ல பலன் கிடைத்திடும்

வெள்ளரி :
இது கண்களை குளிரச் செய்திடும். வெள்ளரியை வட்ட வடிவில் வெட்டி அதனை அப்படியே கண்களில் மேலே வைத்து கண்ணை மூடி படுத்துக் கொள்ளுங்கள். இது கண்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். நீண்ட நேரம் உட்கார்ந்து கணினியில் பணியாற்றுகிறவர்கள் இதனை அவசியம் செய்ய வேண்டும். வெள்ளரியை சாறு எடுத்து அதனை மூக்கில் உள்ள கண்ணாடி அடையாளம் இருக்கிற இடத்தில் தடவிக் கொள்ளுங்கள்.

தேன் :
தேன் அதிக திக்காக இருக்கும் அதை அப்படியே தடவுவதற்கு பதிலாக அதனுடன் ஒரு ஸ்பூன் பால் கலந்து சற்று குழைவாக எடுத்துக் கொள்ளுங்கள். அதனை மூக்கில் மார்க் உள்ள இடங்களில் தடவி லேசாக மசாஜ் செய்து பின்னர் கழுவிடலாம். தேனில் உள்ள சத்துக்கள் அடையாளத்தை மறைப்பதுடன் சருமத்திற்கு பொலிவையும் கொடுக்கும் என்பதால் நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.

பயிற்சி :
தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேல் கண்ணாடி அணிந்திருந்தால் அதனை கழற்றி வைத்து விட்டு கண்களுக்கான சில எளிய பயிற்சிகளை செய்யலாம். இது இருக்கமாக இருக்கும் அந்த பகுதிகளை சற்று தளர்வுறச்செய்யும். இதனால் ரிலாக்ஸ் ஆவது உங்கள் கண்கள் மட்டுமல்ல சருமமும் தான். தொடர்ந்து சத்தான உணவுப்பழக்கங்கள் கொண்டிருப்பதும் மிகவும் அவசியமான ஒன்று.