மீண்டும் ஜனாதிபதியாக தாயிப் எர்டோகன்…

மீண்டும் ஜனாதிபதியாக தாயிப் எர்டோகன்…

துருக்கி ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட தாயிப் எர்டோகன் மீண்டும்மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 98 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் 53 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று தாயிப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு மக்கள் கட்சி வேட்பாளர் முஹாரம் இன்ஸ்சுக்கு 31 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்துக்கான தேர்தலில் வெற்றி பெற்ற தாயிப் எர்டோகன் மீண்டும் ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை தேர்தலின் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையால் துருக்கியின் பல பகுதிகளிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.