இந்தியன் 2-வில் நாயகி நயன்தாரா?

இந்தியன் 2-வில் நாயகி நயன்தாரா?

இந்தியன் படத்தின் 2-ம் பாகத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க உள்ளார். முதல் பாகத்தில் நடித்த கமல்ஹாசன் தான் 2-ம் பாகத்திலும் ஹீரோ.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் கமலுக்கு ஜோடியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்தியன் படம் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம். இதில் கமல் இரட்டை வேடங்களில் நடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.