முதல் தோல்வி மற்றும் திலானின் தூண்டுதல் குறித்து அகில கூறுகிறார்…

முதல் தோல்வி மற்றும் திலானின் தூண்டுதல் குறித்து அகில கூறுகிறார்…

சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடன் கடந்த 29ம் திகதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 50 ஓட்டங்களுக்கு 03விக்கெட்களை கைப்பற்றியமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும், விக்கெட்களை கைப்பற்றியும் போட்டியில் வெற்றி பெற முடியாமை துக்கமாக உள்ளதாக இலங்கை சுழற் பந்துவீச்சாளர் அகில தனஞ்சய இடண்டாவது போட்டியின் பயிற்சிப் போட்டிக்கு பின்னர் தம்புள்ளையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

” நன்றாக பந்து வீசுவது குறித்து, உண்மையில் மகிழ்சியடைகிறேன். போட்டியில் வெற்றி பெற முடியவில்லையே என்ற துக்கம் உள்ளது, விக்கெட்களை கைப்பற்றியும் வெற்றியினை எட்ட முடியவில்லையே…”

“முதலில் எனது சுழற்சி சற்று மேலெழுந்தது என்றே கூற வேண்டும்.. சுழற்சியின் வேகத்தினை குறைத்து தான் இப்போது பந்து வீசுகிறேன், அதற்கு கடுமையாக பயிற்சி எடுத்தேன்…”

அவ்வாறே, தமது துடுப்பாட்டத்தின் வளர்ச்சி குறித்து துடுப்பாட்ட பயிற்சியாளர் திலான் சரவீரவின் ஒத்துழைப்பு குறித்தும் அகில தனஞ்சய தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

“..இப்போது பயிற்சியின் போது அதிகளவு துடுப்பாட்டம் செய்கிறேன், ஏனெனில் திலான் அண்ணாவுடன் அதிகளவு பயிற்சிகளை மேற்கொள்கிறேன், எப்போதும் திலான் அண்ணா என்னால் முட்யும் என்றே கூறுகிறார். அதனை இலக்காக கொண்டே நான் பயிற்சியில் ஈடுபடுகிறேன்”