விமானியுடன் பிரபல நடிகை திருமணம்…

விமானியுடன் பிரபல நடிகை திருமணம்…

சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை சுவாதிக்கு, அவரது காதலரான விமான பயணியுடன் திருமணம் நடைபெறவுள்ளது.

தமிழில் சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகி பிரபலமானார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதுகளும் கிடைத்தன.

தொடர்ந்து போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருக்கும், சுவாதிக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது.

இவர்களது திருணமத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, சுவாதி-விகாஸ் திருமணம் எதிர்வரும் 30 ஆம் திகதி ஐதராபாத்தில் நடைபெறவுள்ளதுடன், திருமண வரவேற்பு நிகழ்ச்சியை செப்டம்பர் 2 ஆம் திகதி கொச்சியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Swathi Reddy and Vikas