முன்னாள் ஜனாதிபதியிற்கு சீ.ஐ.டி அழைப்பு…

முன்னாள் ஜனாதிபதியிற்கு சீ.ஐ.டி அழைப்பு…

முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை(17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக் கொள்ளவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

2008 மே 22ம் திகதி இரவு கீத் நோயார் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்தில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர உள்ளிட்ட இராணுவ வீரர்கள் 08 பேர் சந்தேகத்தின் பேரில் பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.