தனியார் பேரூந்து ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்…

தனியார் பேரூந்து ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்…

தனியார் பேரூந்து ஊழியர் சங்கத்தின் ஒரு பிரிவினர், இன்று(15) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.

அதிகரிக்கப்பட்ட போக்குவரத்து அபராதத் தொகையைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகள் தொடர்பில் பொறுப்புவாய்ந்த பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என அகில இலங்கை தனியார் பேரூந்து ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் யூ.கே. குமாரரத்ன ரேணுக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை தனியார் பேரூந்து ஊழியர் சங்கம் உள்ளிட்ட பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் இந்தப் பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவு வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

தற்போது உயர்தர பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில், பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவு வழங்க முடியாது எனவும் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சை நடைபெற்று வருகின்றமையால், பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளாது சேவையில் ஈடுபடுமாறு பேரூந்து ஊழியர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக குறித்த சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.