பேரழிவு தொடர்பான மறுகட்டமைப்புக்கு உலக வங்கியால் 100 கோடி டொலர் கடனுதவி..

பேரழிவு தொடர்பான மறுகட்டமைப்புக்கு உலக வங்கியால் 100 கோடி டொலர் கடனுதவி..

இந்தோனேசியா நாட்டை சமீபத்தில் உலுக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு தொடர்பான மறுகட்டமைப்புக்கு 100 கோடி டொலர் கடனுதவி வழங்குவதாக உலக வங்கி இன்று(15) அறிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29 ஆம் திகதி சுலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள பலு நகரை சுனாமி தாக்கியது. குறித்த இந்த இயற்கை சீற்றத்தினால் சுமார் 2000 பேர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர். சுமார் 5000 பேர் காணாமல் போனதாக தெரிகிறது. இதுதவிர, பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து உள்நாட்டிலேயே அகதிகள் போல் வாழ்ந்து வருகின்றனர்.