கலஹா சம்பவம் தொடர்பில் மன்னிப்புக் கோரத் தயார்…

கலஹா சம்பவம் தொடர்பில் மன்னிப்புக் கோரத் தயார்…

கலஹா வைத்தியசாலையின் மீது தாக்குதல் மேற்கொண்டது தவறு என்பதனை பிரதேச மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர் எனத் தெரிவித்த அகில இலங்கை குருமார் சங்கத்தின் கண்டி கிளையின் தலைவரான சுந்தரராஜன் பிரபாஹர் குருக்கள், எனவே தாக்குதல் சம்பவத்துக்காக, வைத்தியரிடமும் சம்பந்தப்பட்டவர்களிடமும் மன்னிப்புக் கோருவதற்கு, பிரதேச மக்கள் முன்வந்துள்ளனர் என்றும், எனவே, கலஹா வைத்தியசாலையைத் திறப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கண்டி டெவோன் ரெஸ்டில், நேற்று(15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை உயிரிழந்ததையடுத்து நடந்த சம்பவத்தை நினைவூட்டியதுடன், இதையடுத்தே, வைத்தியசாலை மூடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தில், அன்று அவசர நோயாளிகள் இருவரை மேலதிக சிகிச்சைக்காக மற்றுமொரு வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்ற அம்பியுலன்ஸ் வண்டி வரும் வரை காத்திருக்க வேண்டி ஏற்பட்டதால், குழந்தையின் மரணம் சம்பவித்துள்ளதாகவும் எனவே, இதில் வைத்தியரின் பிழை ஒன்றும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.