ரவீந்திர விஜேகுணவர்தன’வுக்கு ஜனாதிபதியினால் மற்றுமொரு பதவி…

ரவீந்திர விஜேகுணவர்தன’வுக்கு ஜனாதிபதியினால் மற்றுமொரு பதவி…

நீரில் மூழ்கி மரணங்கள் நிகழ்வதனைக் குறைக்க ஒரு தேசிய திட்டத்தை செயல்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னாள் கடற்படை தளபதி மற்றும் இந்நாள் பாதுகாப்புத் தளபதி அட்மிரல் தலைமை ரவீந்திர விஜேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது குறித்த பதவி நியமனமானது கடந்த வெள்ளிக்கிழமை (12) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டதாக பாதுகாப்பு தளபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் நீரில் மூழ்கி உயிரிழந்த மரண எண்ணிக்கையானது முறையே 760 மற்றும் 678 ஆகவுள்ள நிலையில், இவ்வருட நடுப்பகுதியளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 412 பதியப்பட்டுள்ளதொடு, அதிகளவு கொழும்பு மற்றும் காலி மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தோர் எனவும் குறித்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.