அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க விவசாய அமைச்சு தீர்மானம்…

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க விவசாய அமைச்சு தீர்மானம்…

சந்தையில் அரிசிக்கு நிலையான விலையை பேணும் நோக்கில், எதிர்வரும் 2019ம் ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க விவசாய அமைச்சு முடிவு செய்துள்ளது.

இருப்பினும், அரிசிக்கு சந்தையில் தற்போது இருக்கின்ற விலையை விட 10 ரூபாய் குறைக்க ஆலை உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதற்கிடையில் அடுத்த மாதம் முதல் பி.எம்.பீ (BMB) என்ற அரிசி வகையை
சதொச மற்றும் சுப்பர் மார்கட்கள் ஊடாக விநயோகிக்க உள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.