வெளியானது “பேட்ட” படத்தின் டீசர்…

வெளியானது “பேட்ட” படத்தின் டீசர்…

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ எதிர்வரும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அனிருத் இசையில் உருவாகி இருக்கும் பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், ரஜினியின் பிறந்த நாளான இன்று பேட்ட படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரஜினி தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

டீசரில், ரஜினி இளமை தோற்றத்தில் இரண்டு தோற்றங்களில் மாஸ் தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.