பருக்கள், கரும்புள்ளிகளுக்கு இந்த 7 குறிப்புகள் போதும்…

பருக்கள், கரும்புள்ளிகளுக்கு இந்த 7 குறிப்புகள் போதும்…

முகத்தின் அழகை இயற்கையாகவே பெற வேண்டுமென்றால் உங்களின் முகத்திற்கேற்ப முக பூச்சுகளை பயன்படுத்த வேண்டும்.

ஒரு சிலருக்கு எண்ணெய் வடியும் முக அமைப்பு இருக்கும், சிலருக்கு வறட்சியான சருமம் இருக்கும், வேறு சிலருக்கு முகம் எப்போதுமே சாதாரண நிலையிலே இருக்கும்.

வறட்சியான முகம்:
முகத்தில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பவர்களுக்கு எளிய வழி உள்ளது. இதற்கு கற்றாழை, கிரீன் டீ, வெள்ளரிக்காய் போன்றவற்றை முகத்தில் பயன்படுத்தலாம். இந்த குறிப்புகள் முகத்தின் வறட்சியை குறைத்து விடும்.

அழுக்குகள் கொண்ட முகம்:
வெளியில் அதிகம் சுற்றி திரியும் உங்கள் முகத்தில் பல்வேறு அழுக்குகள், கிருமிகள் குடியிருக்கும். இவை தான் முகத்தின் அழகை கெடுக்கிறது. இதனை போக்குவதற்கு அண்ணாச்சி பழம், பப்பாளி போன்ற அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்ட பழங்கள் உதவும்.

எண்ணெய் வடிதல்:
முகத்தில் எப்போதுமே எண்ணெய் வடிந்து கொண்டே இருந்தால் அவர்களுக்கு சிறந்த தீர்வு களிமண் ஃபேஸ் மாஸ்க் தான். குறிப்பாக முல்தானி மட்டி போன்ற முகப்பூச்சிகள் இவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதனுடன் பன்னீர் அல்லது தேன் கலந்து முகத்தில் தடவினாலே எண்ணெய் வடிதல் மற்றும் பருக்கள் இல்லாமல் இருக்கும்

கருமை முகத்திற்கு:
முகத்தை பொலிவாகவும் மினுமினுக்கவும் வைக்க இந்த ஃபேஸ் மாஸ்க் உங்களுக்கு உதவும். இதனை பீல் ஆப்ஃ மாஸ்க் என்று கூறுவார்கள். இது முகத்தின் கருமையை நீக்கி பளபளக்க வைக்கும். இதற்கு ஓட்ஸை, சர்க்கரை போன்றவை சிறந்த வழியாகும்.

சாதாரண முகம்:
சாதாரண முகத்தை கொண்டோருக்கு பழங்கள் கொண்ட எல்லாவித ஃபேஸ் மாஸ்க்கும் சிறந்த பலனை தரும். மேலும், இந்த மாஸ்குகள் அனைத்துமே முக அழகை மெருகேற்ற பெரிதும் உதவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றம் உங்களின் முக அழகில் தென்படும்.