Aston martin வாகனத்திற்கான இலங்கையின் முதல் உரிமையாளராக குமார வெல்கம.. (PHOTOS)

Aston martin வாகனத்திற்கான இலங்கையின் முதல் உரிமையாளராக குமார வெல்கம.. (PHOTOS)

(FASTNEWS | COLOMBO) – முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கொள்வனவு செய்துள்ள நவீனரக Aston martin DB 11 convertible எனும் வாகனம் குறித்து இந்நாட்களில் அதிகளவு பேசப்படுகின்றது.

இலங்கையில் குறித்த வாகனம் ஒன்றினை உரித்தாக்கிக் கொள்ளும் முதலாவது நபர் இவர் என்பதும் இங்கு விசேடமாகும்.

குறித்த வாகனம் தயாரிக்கும் நாட்டில் கொள்வனவு செய்தால் அதன் பெறுமதி $250,000 ஆகவுள்ளதோடு, இலங்கை பெறுமதியில் 4.5கோடி ரூபா பெறுமதி என கணிக்கப்பட்டுள்ளது.

எனினும், குமார வெல்கம தெரிவிக்கையில் இதற்கு அவர் 7.5 கோடி செலவாகியுள்ளதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.