ஐக்கிய நாடுகள் அமைப்பின் உபகுழு இலங்கைக்கு…

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உபகுழு இலங்கைக்கு…

(FASTNEWS|COLOMBO) சித்திரவதைகள் தடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் உபகுழு இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 2 ஆம் திகதி 12 வரை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் எந்த அளவு சித்திரவதைகளினால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்பதைக் கண்டறியும் நோக்கிலேயே இவர்களின் விஜயம் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

04 பேர் கொண்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதுடன், மோல்டோ, மொரிஷியஸ், சைப்ரஸ் மற்றும் பிலிப்பைன்ஸின் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர்கள் அரச அதிகாரிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் அமைப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.