இலங்கையில் பதிவாகிய வெடிப்புகள் : ஜனாதிபதிக்கு கண்டனம் – பொலிஸ் மீளவும் சாகலவுக்கு…

இலங்கையில் பதிவாகிய வெடிப்புகள் : ஜனாதிபதிக்கு கண்டனம் – பொலிஸ் மீளவும் சாகலவுக்கு…

(FASTGOSSIP | COLOMBO) – நாடளாவிய ரீதியாக நேற்று(21) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்க வேண்டுமென சமூக வளைய ஊடகங்கள் கடும் கண்டனங்களை முன்வைத்து வருகின்றது.

குறித்த சமூக ஊடகங்கள் தெரிவிக்கையில்; பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ், ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்கள் என்பதால் பிரதமர் அல்லது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தேசிய பாதுகாப்பு பேரவைக்கு அழைப்புவிடுப்பதில் இருந்தும் ஜனாதிபதி அண்மையில் விலகி இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், சாகல ரத்நாயக்கவிடமிருந்து பொலிஸ் இனை ஜனாதிபதியின் கீழ் கொண்டு வந்ததினையும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.