வட கொரிய தலைவர் – ரஷ்ய ஜனாதிபதி நாளை(25) முக்கிய பேச்சுவார்த்தை…

வட கொரிய தலைவர் – ரஷ்ய ஜனாதிபதி நாளை(25) முக்கிய பேச்சுவார்த்தை…

(FASTNEWS|COLOMBO) வரலாற்றில் முதல்முறையாக ரஷ்ய ஜனாதிபதி புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் நாளை(25) ரஷ்யாவின் விலாடிவோஸ்ட்டோக் நகரில் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடகொரிய தலைவர் கிம் ஜாங் தனது சிறப்பு ரயில் மூலம் சுமார் 9 மணிநேரம் பயணித்து ரஷ்யா நேரப்படி சுமார் 11 மணியளவில் விலாடிவோஸ்ட்டோக் நகரை வந்தடைந்தார்.

ரஷ்ய தலைவர் வடகொரிய ஜனாதிபதியும் நாளை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.