அடுத்த வாரம் முதல் புதிய வீடமைப்பு கடன் திட்டம் நடைமுறைக்கு

அடுத்த வாரம் முதல் புதிய வீடமைப்பு கடன் திட்டம் நடைமுறைக்கு

(FASTNEWS | COLOMBO) – ‘ஸ்வீட் ஹோம்’ என்ற புதிய வீடமைப்பு கடன் திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் அவரது அமைச்சில் நேற்று(22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில்,

புதிதாக திருமணமான இளம் தம்பதியினருக்கு வீடொன்றை பெற்றுக் கொள்வதற்காக ஸ்வீட் ஹோம் வீடமைப்பு கடன் திட்டம் வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் குறித்த புதிய கடன் திட்டமானது அடுத்தவாரம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் குறைந்தது 6.75 சதவீத வட்டிக்கு ஆக கூடிய தொகையாக 10 மில்லியன் ரூபாவை கடனாக பெற்று கொள்ள முடியும் என்பதுடன், இதனை இளம் தம்பதியினர் 25 வருடங்களில் திருப்பி செலுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.