சுகாதார சேவைப் பணிப்பாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

சுகாதார சேவைப் பணிப்பாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

(FASTNEWS | COLOMBO) – சுகாதார அமைச்சின் சுகாதார சேவைப் பணிப்பாளர் பிரியந்த அத்தபத்துவிற்கு அரச நிறுவனங்களின் ஊழல் மோசடிகளை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் ஜூன் 12ம் திகதி ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மாதம் ஒன்றுக்கு 50 மில்லின் ரூபாவுக்கும் அதிக தொகை அரசாங்கத்தால் மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்கு செலுத்தப்படுவதாக ஜனாதிபதி ஆணைக்குழுவால் கண்டறியப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படாத நிறுவனம் ஒன்றுக்கு அரசு பணம் செலுத்துவதால் ஏற்பட்டுள்ள நிதி மோசடி சம்பந்தமாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே சுகாதார சேவைப் பணிப்பாளர் பிரியந்த அத்தபத்துவிற்கு ஆணைக்குழு இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.