மூக்கின் மேல் அசிங்கமாக இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க

மூக்கின் மேல் அசிங்கமாக இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க

(FASTNEWS|COLOMBO)- சருமத்தில் உள்ள சிறு சிறு சிறு ஓட்டைகள் துளைகள் என்று அறியப்படுகின்றன. இவை எண்ணெய் மற்றும் வியர்வையை வெளியேற்றவும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன.

இதன் காரணமாக கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகளுடன் கூடிய கட்டிகள், பருக்கள் போன்றவை ஏற்பட்டு, சருமத்தை சோர்வாக மாற்றுகின்றன. சில நேரங்களில் நமது அழகை மேம்படுத்தப் பயன்படுத்தும் மேக்கப் கூட சருமத்தில் கட்டிகளை உருவாக்கக் கூடும்.

சருமத்தை சரியான முறையில் பராமரித்து சருமத்தின் துளைகளை அடைக்க உதவும் சில சிறப்பான தீர்வுகளை நாங்கள் இங்கே கொடுத்துள்ளோம். அவற்றை இப்போது அறிந்து கொள்வோம்.

நீராவி பிடிப்பது:
முகத்திற்கு நீராவி பிடிப்பதால் அடைக்கப்பட்ட துளைகள் திறக்கப்பட்டு சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறுகிறது.

தேவையான பொருட்கள்:
கொதிக்க வைத்த நீர்

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதனை அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.
2.அந்த பாத்திரத்தை கீழே வைத்து, உங்கள் முகத்தில் அந்த நீரில் இருந்து வெளிப்படும் ஆவி படும்படி முகத்தைக் காட்டவும்.
3. உங்கள் தலை முழுவதும் ஒரு போர்வையால் போர்த்திக் கொள்ளவும்.
4. 15 நிமிடங்கள் இந்த நீராவி உங்கள் முகத்தில் படுமாறு பார்த்துக் கொள்ளவும்.
5. பின்பு முகத்தைத் துடைத்து மென்மையான மாய்ச்ச்சரைசர் பயன்படுத்தவும்.
6. ஒரு வாரத்தில் இரண்டு முறை இதனைப் பின்பற்றவும்.

சர்க்கரை ஸ்க்ரப்:
சர்க்கரை இயற்கையான முறையில் மேல்படலப் பிரிப்பை மேற்கொள்ளும் ஒரு முகவராக உள்ளது. இதனால் அடைக்கப்பட்ட துளைகள் திறக்கப்படுகின்றன.
தேவையான பொருட்கள்:
இரண்டு ஸ்பூன் சர்க்கரை
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு

செய்முறை:
1. ஒரு கிண்ணத்தில் சர்க்கரை மற்றும் எழுமிச்சை சாறு சேர்த்து ஒரு அடர்த்தியான பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
2. இந்த பேஸ்டை உங்கள் மூக்கில் தடவி மென்மையாக சுழல் வடிவத்தில் மசாஜ் செய்யவும்.
3. ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் செய்த பின்னர், முகத்தைக் கழுவவும்.
4. பின்பு ஒரு மென்மையான மாயச்ச்சரைசர் தடவவும்.
5. இந்த வழிமுறையை வாரத்திற்கு ஒரு முறை பின்பற்றவும்.

பேக்கிங் சோடா:
பேக்கிங் சோடா இயற்கை முறையில் மேல்படல பிரிப்பை மேற்கொண்டு சரும துளைகளைச் சுத்தம் செய்ய உதவுகிறது. இதனால் கரும்புள்ளிகள் தோன்றுவது தடுக்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்:
இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடா
ஒரு ஸ்பூன் தண்ணீர்

செய்முறை:
1. ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
2. இந்த பேஸ்டை உங்கள் மூக்கில் தடவி 5 நிமிடங்கள் ஊற விடவும்.
3. ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.
4. இந்த செய்முறையை வாரத்தில் ஒரு முறை பின்பற்றவும்.