மே.இ.தீவுகளை வீழ்த்தி பங்களாதேஷ் 07 விக்கெட்டுக்களினால் வெற்றி

மே.இ.தீவுகளை வீழ்த்தி பங்களாதேஷ் 07 விக்கெட்டுக்களினால் வெற்றி

(FASTNEWS|COLOMBO) – மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 23 ஆவது போட்டி மேற்கிந்தியத்தீவுகள், மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நேற்று(17) டவுன்டனில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை குவித்தது.

322 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்து மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.