இபோலா தொற்று நோயை தடுக்க 02 மருந்துகள்

இபோலா தொற்று நோயை தடுக்க 02 மருந்துகள்

(FASTNEWS| COLOMBO) – உலகில் மிக கொடிய வைரஸாக கருதப்பட்ட இபோலா தொற்று நோயை தடுப்பதற்காக பரிசோதிக்கப்பட்ட 04 மருந்துகளில் 02 மருந்துகளின் பரிசோதனை 90 வீதம் வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இபோலா வைரஸின் தாக்கத்தினால் சுமார் 11,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த மருந்துகள் கொங்கோ இராச்சியத்திற்கு விநியோகிக்கப்படவுள்ளன. உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் விஞ்ஞானிகள் இணைந்தே இந்த மருந்தை பரிசோதித்துள்ளனர்.

சியரா லியோன், லைபீரியா, கினியா மற்றும் கொங்கோ இராச்சியத்திலேயே இபோலா வைரஸ் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. தொடுதல் மற்றும் சுரப்பிகள் மூலமே இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )