புயல் எச்சரிக்கை காரணமாக விமான சேவைகள் இரத்து

புயல் எச்சரிக்கை காரணமாக விமான சேவைகள் இரத்து

(FASTNEWS|COLOMBO) – ஜப்பானின் மேற்கு பகுதியில் உருவான குரோசா என்ற புயல், இன்று வடகிழக்கு நோக்கி மணிக்கு 162 கிலோ மீற்றர் வேகத்தில் நகரும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக 679 விமானங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், அந்நாட்டின் மேற்கு பகுதி நோக்கி செல்லும் ஷின்கான்சென் புல்லட் ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளதோடு, உள்ளூர் ரயில் சேவை மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை, புயல் கரையை கடக்கும் போது, பலத்த காற்றுடன் ஒரே நாளில் மட்டும் சுமார், 1000 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நீர் நிலைகள் அருகே வசிக்கும் சுமார் 4 லட்சத்து 46 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச சசெய்திகள் தெரிவிக்கின்றன.