ரயில்வே துறைக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி முதன் முறையாக கடனுதவி

ரயில்வே துறைக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி முதன் முறையாக கடனுதவி

(FASTNEWS | COLOMBO) – இலங்கை ரயில்வே திணைக்களத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்தினை மேம்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 160 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்குகிறது.

இது இலங்கையின் ரயில்வே துறைக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் முதல் கடன் உதவியாகும்.

2050ஆம் ஆண்டளவில் நாட்டில் உயர்வடைந்து செல்லும் மக்கள் தொகைக்காக பொது போக்குவரத்து துறையை வலுப்படுத்தும் நோக்கில் குறித்த இந்த கடனுதவி வழங்கப்படுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பேச்சாளர் இது தொடர்பில் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.