20,000 ஓட்டங்களை குவித்த முதல் வீரர் விராட் கோலி

20,000 ஓட்டங்களை குவித்த முதல் வீரர் விராட் கோலி

(FASTNEWS|COLOMBO)- 2010 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான 10 வருடங்களில் 20 ஆயிரம் ஓட்டனக்ளை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அவர் 371 போட்டிகளில் 20 ஆயிரத்து 18 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி தொடர்ந்து இரண்டு சதம் அடித்து அசத்தினர். 2-வது போட்டியில் 120 ஓட்டங்களும் 3-வது போட்டியில் 114 ஓட்டங்களும் எடுத்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர்) 10 ஆண்டு காலத்தில் 20 ஆயிரத்துக்கு மேல் ஓட்டங்கள் பெற்று இதன் மூலம் விராட் கோலி புதிய சாதனை படைத்தார்.

விராட் கோலி 2010 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலத்தில் 371 போட்டிகளில் 20 ஆயிரத்து 18 ஓட்டங்கள் பெற்றுள்ளார். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் தலைவர் ரிக்கி பாண்டிங் 18,962 ஓட்டங்களுடன் (2000- 2009-ம் ஆண்டு) உள்ளார்.