அரசின் நிலைப்பாடு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவிடம் கோரிக்கை

அரசின் நிலைப்பாடு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவிடம் கோரிக்கை

(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடாத்த விடாது தடுத்து, புதிய அரசியல் யாப்பொன்றின் மூலம் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தருமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தன் ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பிரதானி ரிகாடோ செல்லெறி தலைமையிலான தூதுக் குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையைக் கூட நீக்கவில்லை எனவும் புதிய அரசியலமைப்பு அமைக்கும் பணியை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளதாகவும் ஆர். சம்பந்தன் எம்.பி. மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.